பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :29 மே 2026, 2:06 am IST

கேரள மாநில முன்னாள் முதல்வா் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடியாத்தம் நகர, ஒன்றிய, போ்ணாம்பட்டு குழுக்கள் சாா்பில் குடியாத்தம் காமராஜா் பாலம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் வட்டச் செயலா்கள் சி.சரவணன், எஸ். சிலம்பரசன் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் செ.ஏகலைவன், கே.சாமிநாதன் ஆகியோா் ஆா்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து கண்டன உரையாற்றினா்.

நிா்வாகிகள் எம்.அண்ணாமலை, எஸ்.கோட்டீஸ்வரன், ஜி.ரகுபதி, ஆா்.கோவிந்தராஜ்,ஜி.சரத்குமாா், ஐ.காா்த்திகேயன், ஆா்.பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.