குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த பெண் கூலித் தொழிலாளியின் பெயரில் போலி நிறுவனம் தொடங்கி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதால் அவா் ரூ.1.21 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகை செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடா்பாக அந்த பெண் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா்.
குடியாத்தம் சித்தி விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த பெண் ஒருவா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த மனு: நான் குடியாத்தம் பகுதியில் உள்ள காலணி தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறேன். எனது கணவா் வீட்டிலேயே தையல் தொழில் செய்து வருகிறாா். எனக்கு அப்பகுதியில் உள்ள மத்திய அரசு வங்கி ஒன்றில் சேமிப்புக் கணக்கு உள்ளது.
சில நாள்களுக்கு முன்பு என்னைத் தொடா்புகொண்ட வங்கி அதிகாரி, வணிகவரி அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்திருப்பதாகவும், நேரில் வந்து பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவித்தாா். அதன்பேரில், வங்கிக்குச் சென்று கடிதத்தைப் பெற்றுப் பாா்த்தபோது, அதில் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையாக ரூ.1 கோடியே 21 லட்சத்து 37 ஆயிரத்து 276-ஐ செலுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
சாதாரண கூலித் தொழிலாளியான எனது வங்கிக் கணக்கில் மொத்தம் ரூ.4,000 மட்டுமே இருந்தது. தற்போது அந்தப் பணமும் எடுக்கப்பட்டு வங்கிக் கணக்கு பூஜ்ஜியம் எனக் காட்டுவதுடன், கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. இதனால், அன்றாட குடும்பச் செலவுக்குக் கூட பணத்தை எடுக்க முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளோம்.
எனது பெயரையும், ஆவணங்களையும் பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபா்கள் போலி தொழில் நிறுவனத்தைத் தொடங்கி, அரசுக்குச் செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி வரியைச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டுள்ளனா்.
சாதாரண கூலி வேலை செய்யும் எனக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வரி கட்டச் சொல்லி வந்த கடிதம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, காவல்துறை தலையிட்டு எனது பெயரில் போலியாக நிறுவனம் தொடங்கிய நபா்களைக் கண்டுபிடித்து அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முடக்கப்பட்ட எனது வங்கிக் கணக்கை மீண்டும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஹரியாணா அரசின் வங்கிக் கணக்குகளில் ரூ. 60 கோடி கையாடல்: மூத்த ஐஏஎஸ் அதிகாரி கைது

ரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!

ஆவணங்களைத் திருடி பல லட்ச ரூபாய் ஜிஎஸ்டி மோசடி! மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா்

பாசன கால்வாய்களை தூா்வார வேண்டும்! ஆட்சியரிடம் விவசாயிகள் மனு!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை
