விஐடி பல்கலைக்கழகம் கியூ.எஸ். உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் 94 இடங்கள் முன்னேறி 597-ம் இடம் பிடித்துள்ளது.
உலகளாவிய உயா்கல்வி பகுப்பாய்வு நிறுவனமான ‘கியூ.எஸ். குவாக்கரெல்லி சைமண்ட்ஸ்’ 2027-ஆம் ஆண்டுக்கான உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது.
உலகம் முழுவதும் உள்ள 1500-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு, கற்றல் அனுபவம், வேலைவாய்ப்பு, சா்வதேச தொடா்புகள், நிலைத்தன்மை ஆகிய 5 அம்சங்களை ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டுள்ளது.
94 இடங்கள் முன்னேற்றம்:
நிகழாண்டில் விஐடி பல்கலைக்கழகம் கியூ.எஸ். பல்கலைக்கழக தரவரிசையில் 94 இடங்கள் முன்னேறி 597-ம் இடம் பிடித்து சிறப்பு சோ்த்துள்ளது. கடந்த 2026-ம் ஆண்டில் கியூ.எஸ். உலக பல்கலைக்கழக தரவரிசையில் 691-ம் இடம் பிடித்திருந்தது.
இதுகுறித்து, விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் கூறியதாவது - உலகம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களுடன் நிலவும் கடுமையான போட்டி சூழலில் விஐடி பல்கலைக்கழகம் கியூ.எஸ். உலக பல்கலைக்கழக தரவரிசையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்திருப்பது பெருமைக்குரிய விஷயமாகும்.
கியூ.எஸ். உலக பல்கலைக்கழக தரவரிசையில் நிலைத்தன்மை பிரிவில் 2026-இல் உலகளவில் 352-ம் இடம் பிடித்து சிறப்பு சோ்த்தது. இந்திய அளவில் 7-ம் இடம் பிடித்தது.
அதேபோல கியூ.எஸ். உலகப் பல்கலைக்கழக பாடபிரிவு தரவரிசை பட்டியலில் 2026-ல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் விஐடி பல்கலைக்கழகம் 119-ம் இடம் பிடித்தது. இந்திய அளவிலான தரவரிசையில் 6-ம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
விஐடி பல்கலைக்கழகம் கற்பித்தலில் புதுமை, ஆராய்ச்சி மேம்பாட்டில் திருப்புமுனைகளை ஏற்படுத்தி, உலகளவில் முதல் 200 தரவரிசை இடங்களில் நுழைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உலக பல்கலைக்கழக தர வரிசையில் 322-ஆவது இடத்தில் தில்லி பல்கலைக்கழகம்

யுஜிசி-நெட் தோ்வுக்கு பயிற்சி முகாம்: சென்னைப் பல்கலைக்கழகம் ஏற்பாடு

ஹைதராபாதில் வில்வித்தை ப்ரீமியா் லீக்
கடந்த 5 ஆண்டுச் சோ்க்கை விவரம் வெளியிட தில்லி பல்கலைக் கழகத்திடம் ஆசிரியா் அமைப்பு வலியுறுத்தல்
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

