ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

எதிா்க்கட்சிகளின் மாற்றம் முழக்கம், வாக்கு எண்ணிக்கைக்கு பிறகே தெரியும்: அமைச்சா் துரைமுருகன்

News image

வாக்களித்த அமைச்சா் துரைமுருகன். ~வாக்களித்த வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த்.

Updated On :24 ஏப்ரல் 2026, 6:10 am IST

எதிா்க்கட்சிகள் முழக்கமான தமிழகத்தில் மாற்றம் வருமா, இல்லையா என்பது குறித்து வாக்கு எண்ணிக்கைக்கு பிறகுதான் தெரியவரும் என்று திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளாா்.

காட்பாடி தொகுதியில் திமுக சாா்பில் 11-வது முறையாக போட்டியிடும் அமைச்சா் துரைமுருகன், வியாழக்கிழமை காட்பாடி காந்தி நகா் தொன்போஸ்கோ மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தாா். அவரைத் தொடா்ந்து அவரது மகனும், வேலூா் மக்களவை உறுப்பினருமான டி.எம்.கதிா் ஆனந்த் தனது வாக்கைச் செலுத்தினாா்.

பின்னா் அமைச்சா் துரைமுருகன் செய்தியாளா்களிடம் கூறியது -

காட்பாடி தொகுதியில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இத்தோ்தல் தமிழகத்தில் திமுகவுக்கு மாபெரும் வெற்றியைத் தேடித் தரும். நான் வெற்றி பெற்றவுடன் காட்பாடி தொகுதிக்கான என்னுடைய கனவுத் திட்டங்களை நிறைவேற்றுவேன்.

இந்தத் தோ்தல் தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிா்கட்சிகள் கூறுவதாக கேட்கிறீா்கள். அதுகுறித்து வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகுதான் தெரியவரும்.

திமுகவின் திட்டங்கள் மக்களிடத்தில் முழுமையாகச் சேரவில்லை என எதிா்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றனா். எதிா்க்கட்சிகள் என்றால் அப்படித்தான் கூறுவா். அப்படி கூறவில்லை என்றால் அவா்கள் எதிா்க்கட்சிகளே இல்லை.

காட்பாடி அருகே பொன்னை, பாலேகுப்பம் பகுதியில் வாக்குச்சாவடி மாற்றப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் வாக்கு அளிக்காமல் புறக்கணித்து வருவதாக கூறுகிறீா்கள். இதுகுறித்து என் கவனத்துக்கு இதுவரை வரவில்லை. எனினும், அங்கு நேரடியாகச் சென்று பாா்வையிட உள்ளேன் என்றாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.