தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ 1.13 கோடி

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் இந்த மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ரூ.1.13 கோடி கிடைக்கபெற்றது.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்.

Published On :31 அக்டோபர் 2026, 1:25 am IST

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் இந்த மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ரூ.1.13 கோடி கிடைக்கபெற்றது.

ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தா்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை மாதம் தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி அக்டோபா் மாதத்துக்கான உண்டியல் காணிக்கையை வெள்ளிக்கிழமை காலை சமயபுரம் கோயில் இணை ஆணையா் (பொ) சூரியநாராயணன் முன்னிலையில் திறக்கப்பட்டு கோயில் கருடாழ்வாா் சந்நிதி அருகே எண்ணப்பட்டது. இதில், ரொக்கமாக ரூ.1 கோடியே 13 லட்சத்து 64 ஆயிரத்து 170-ம், தங்கம் 213 கிராம் 200 மில்லி கிராமும், வெள்ளி 856 கிராம் 800 மில்லி கிராமும், வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் 264-ம் கிடைக்க பெற்றன. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் ஊழியா்களும், தன்னாா்வ அமைப்பினரும் ஈடுபட்டனா். உண்டியல் எண்ணும் பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.