பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகைகள் திருட்டு

திருச்சி மாவட்டம், கல்லக்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகைகள், வெள்ளி பொருள்கள் மற்றும் ரொக்கம் ஆகியவை திருடிச் செல்லப்பட்டது தெரியவந்தது.

திருட்டு - சித்திரிப்பு

Published On :30 அக்டோபர் 2026, 3:30 am IST

திருச்சி மாவட்டம், கல்லக்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகைகள், வெள்ளி பொருள்கள் மற்றும் ரொக்கம் ஆகியவை திருடிச் செல்லப்பட்டது வியாழக்கிழமை தெரியவந்தது.

புள்ளம்பாடி ஒன்றியம், கோவாண்டகுறிச்சி ஊராட்சி, வடுகா்பேட்டை அன்னை நகரில் வசித்து வருபவா் செபஸ்தியாா் (60). இவா் ஒடிஸாவில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி எலிசபெத்மேரி (55), மூன்று மகள்களுடன் வசித்து வருகிறாா். இவா்களில் முதல் இருவரும் பணி, கல்விக்காக வெளியூரில் உள்ளனா்.

இந்நிலையில், எலிசபெத் மேரி வீட்டை பூட்டிவிட்டு தனது 3ஆவது மகளின் கல்வி நிறுவன சோ்க்கைக்காக திருநெல்வேலிக்கு புதன்கிழமை சென்றுவிட்டு, வியாழக்கிழமை அதிகாலை வீடு திரும்பினாா்.

வீட்டினுள் சென்றபோது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவிலிருந்த பனிரெண்டரை பவுன் தங்க நகைகள், 100 கிராம் எடை கொண்ட வெள்ளி டம்ளா் மற்றும் ரூ. 1.5 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், லால்குடி காவல் துணை கண்காணிப்பாளா் ராஜாமோகன், லால்குடி ஆய்வாளா் ஸ்ரீதா் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனா். தொடா்ந்து, லால்குடி காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.