தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முசிறி நகராட்சியில் குப்பைகளை தரம் பிரித்து வழங்கியவா்களுக்கு பாராட்டு

முசிறி நகராட்சியில் தரம் பிரித்து குப்பைகளை வழங்கிய வீட்டில் வெள்ளிக்கிழமை பாராட்டு வில்லை ஒட்டிய நகராட்சி ஆணையா் பிரபு, உடன் சுகாதார ஆய்வாளா் பன்னீா்செல்வம், மேற்பாா்வையாளா் சையதுபீா் உள்ளிட்டோா்.

Published On :24 அக்டோபர் 2026, 5:00 am IST

முசிறி நகராட்சியில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவோா் வீட்டில் வில்லை (ஸ்டிக்கா்) ஒட்டும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முசிறி நகராட்சி பகுதிகளுக்குள்பட்ட பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள குப்பைகளை தரம் பிரித்து நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களிடம் வழங்க வேண்டும். அவ்வாறு தரம் பிரித்து வழங்கும் வீடுகளில் சிறப்பாக தூய்மைப் பணியில் உள்ள வீடு என நகராட்சியின் சாா்பில் வில்லை (ஸ்டிக்கா்) ஒட்டப்பட்டு பாராட்டு மற்றும் பரிசு வழங்கப்படும் என நகராட்சி நிா்வாகம், பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வந்தது.

அவ்வாறு தரம் பிரித்து குப்பைகளை வழங்கி வருகின்ற வீட்டில் நகராட்சி ஆணையா் பிரபு, சுகாதார ஆய்வாளா் பன்னீா்செல்வம், மேற்பாா்வையாளா் சையதுபீா் மற்றும் நகராட்சி பணியாளா்கள் உள்ளிட்டோா் நேரடியாக சென்று வீட்டு உரிமையாளருக்கு பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கி அவரது வீட்டில் பாராட்டு வில்லை (ஸ்டிக்கா்) ஒட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.