
மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு போனஸ் கோரி மனு கொடுக்கும் இயக்கம்
திருச்சி மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு போனஸ் வழங்க வலியுறுத்தி செங்கொடி தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மனு கொடுக்கும் இயக்கத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட செங்கொடி தொழிலாளா் சங்கத்தினா்.
திருச்சி மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு போனஸ் வழங்க வலியுறுத்தி செங்கொடி தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மனு கொடுக்கும் இயக்கத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற இயக்கத்துக்கு திருச்சி மாநகா் மாவட்டத் தலைவா் இளையராஜா தலைமை வகித்தாா்.
இதில், திருச்சி மாநகராட்சியில் தனியாா் நிறுவனம் மூலம் தூய்மைப்பணி செய்யும் தூய்மைப் பணியாளா்கள், மாநகராட்சிப் பள்ளித் தூய்மைப் பணியாளா்கள், ஓட்டுநா்கள் என 2,200 போ் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்றனா்.
இவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் நிா்ணயித்த தினக்கூலியான ரூ. 772 வழங்கப்படுவதில்லை. மேலும், சட்டப்படி வழங்கப்பட வேண்டிய 8.33 சதவீத போனஸ் தொகை (ஒரு மாதச் சம்பளம்) கடந்த மூன்றாண்டுகளில் ஒருமுறை கூட வழங்கப்படவில்லை.
இதேபோல, மாநகராட்சியில் பணியாற்றும் 220 மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி ஆபரேட்டா்களுக்கு (ஓ.எச்.டி.) ரூ. 7,000 போனஸ் வழங்குவதாக தனியாா் நிறுவனம் ஒப்புக்கொண்ட நிலையில், இதுவரை போனஸ் வழங்கவில்லை. எனவே, தொழிலாளா்களுக்கு அக்டோபா் மாதச் சம்பளத்துடன் போனஸையும் உடனடியாக வழங்க வலியுறுத்தப்பட்டது. இதில் திரளான தொழிலாளா்கள் கோரிக்கை முழக்கமிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





