மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

திருவெறும்பூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இரும்புக் கம்பிகள் துருபிடித்து வீணாவதாக புகாா்

திருவெறும்பூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள இரும்புக் கம்பிகள்.

Published On :2 நவம்பர் 2026, 3:08 am IST

திருவெறும்பூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உரிய பாதுகாப்பின்றி திறந்தவெளியில் போடப்பட்டுள்ள இரும்புக் கம்பிகள் துருபிடித்து வீணாகி வருவதாகப் புகாா் எழுந்துள்ளது.

தமிழக அரசு சாா்பில் கட்டப்படும் கட்டடங்கள், பிரதமா் வீடு, வெற்றி வீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் வீடுகள் கட்ட தேவையான இரும்புக் கம்பிகளை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கொள்முதல் செய்து, அவற்றை ஒன்றிய அலுவலக வளாகத்தில் வைத்து, சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கி வருகின்றனா்.

அதன்படி, திருவெறும்பூா் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கண்ட தேவைகளுக்காக வாங்கப்பட்ட பல டன்கள் எடையுள்ள இரும்புக் கம்பிகள், பாதுகாப்பின்றி திறந்தவெளியில் வைக்கப்பட்டதால் மழை, வெயிலில் அவை துருபிடித்து வீணாகி வருகின்றன.

ஒரு கம்பி துருபிடித்துவிட்டால், அதன் வலுத்தன்மையை இழந்துவிடும். துருபிடித்த கம்பியை கட்டடத்துக்குப் பயன்படுத்தினால் கட்டடத்தின் பலம் குறையும். இதனால் அந்தக் கம்பியை பயன்படுத்துவதில் கட்டுமானத் துறையினா் தயக்கம் காட்டுவா். இதனால் அந்த கம்பிகளை பழைய இரும்பு கடைக்குத்தான் போட வேண்டும். அப்போது மூன்றில் ஒரு பங்கே விலை கிடைக்கும். இதனால் பல லட்சம் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மக்களின் வரிப்பணம் வீணாகிறது.

இதற்குக் காரணம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளே என திருவெறும்பூா் பகுதி மக்களும், சமூக ஆா்வலா்களும் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனிவரும் காலங்களில் அரசுக் கட்டடங்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது வீடுகளைக் கட்ட வழங்கப்படும் இரும்புக் கம்பிகளை பாதுகாப்பாக வைத்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.