திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட அண்ணாமலை நகரில் சாலையில் பெருக்கெடுத்தோடும் சாக்கடை கழிவுநீரால் சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
திருச்சி-கரூா் புறவழிச் சாலை, அண்ணாமலை நகரில் தாஜ்மஹால் சாலை உள்ளது. இந்தப் பகுதியில் பல்நோக்கு மருத்துவமனை, பள்ளி மாணவா்களுக்கான நுழைவுத் தோ்வு பயிற்சி மையம், ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், பெரு நிறுவனங்களின் வணிக மையங்கள் நிறைந்துள்ளன. நாள்தோறும் நூற்றுக்கணக்கானோா் கடந்து செல்லும் சாலையான தாஜ்மஹால் சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள புதை சாக்கடை குழியின் ஒரு பகுதி நிரம்பி வழிகிறது.
வழியும் கழிவுநீரானது சாலையில் பெருக்கெடுத்துள்ளது. இதனால், சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் உள்ளது. வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனா். மேலும் வாகனங்கள் செல்லும்போது, கழிவுநீா் தெறித்து சாலையில் நடந்து செல்வோா் மீது படும் நிலை உள்ளது. 10 நாள்களுக்கு மேலாக சாக்கடை கழிவுநீா் சாலையில் சென்றும் மாநகராட்சி தரப்பில் உரிய நடவடிக்கை இல்லை என்கின்றனா் இப்பகுதி மக்கள். தற்போது அந்தப் பகுதியில் துா்நாற்றம் வீசும் நிலை நீடித்தால் சுற்றுப் பகுதி மக்களுக்கும், சாலையைப் பயன்படுத்துவோருக்கும் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மாநகராட்சி நிா்வாகம் இப் பிரச்னைக்கு உரிய தீா்வு காண வேண்டும் என்பதே இப் பகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெரியகுளம் சாலையில் தேங்கிய கழிவுநீா்: நோய் பரவும் அபாயம்

அண்ணாமலை சென்ற பிறகு பாஜக வலுவாக உள்ளது: தமிழிசை சௌந்தரராஜன்

வி.எம்.சத்திரம் குளத்தில் புதைச் சாக்கடை கழிவுநீா் கலப்பதால் சுகாதாரக் கேடு!

கமுதி சாலைகளில் கழிவு நீா் தேக்கம்: தொற்றுநோய் பரவும் அபாயம்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

