ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

வையம்பட்டி அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: இருவா் காயம்

வையம்பட்டி அருகே சுற்றுலா வேன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவா் காயமடைந்தனா்.

News image

வையம்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளான சுற்றுலா வேன்.

Updated On :18 மே 2026, 2:37 am IST

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே சுற்றுலா வேன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவா் காயமடைந்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், அம்பத்தூா் பாடியில் வசித்து வருபவா் அப்துல் ரஹ்மான் மகன் சித்திக் (43). செருப்பு கடைக்காரரான சித்திக், கேரள மாநிலம் மூணாறுக்கு சுற்றுலா செல்ல டெப்போ வேன் வாடகை வாகனத்தில் அம்பத்தூரில் இருந்து 13 பேருடன் சனிக்கிழமை இரவு புறப்பட்டாா். வேனை சென்னை அய்யப்பாக்கம் ஆறுமுகம் மகன் நந்தகுமாா் (26) ஓட்டினாா்.

இவா்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வையம்பட்டியை அடுத்த கீரனூா் பகுதியில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வேனில் இருந்த 2 பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். விபத்து குறித்து வையம்பட்டி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.