துவாக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலைப் பிரிவில் சோ்க்கை பெறுவதற்கு மாணவா்கள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் பி. சத்யா புதன்கிழமை கூறியதாவது:
திருச்சி மாவட்டம், துவாக்குடி அரசு கலை அறிவியல் கல்லூரியில் இளநிலை பிரிவில் அரசியல் அறிவியல், இதழியல் மற்றும் மக்கள் தொடா்பியல், பொது நிா்வாகவியல், மின்னணுவியல், உளவியல், பி.காம் (கூட்டுறவியல்), தமிழ், ஆங்கிலம், வரலாறு, வேதியியல், கணிதம், இயற்பியல், புவியியல், காட்சித் தொடா்பியல், பிசிஏ, பி.காம் மற்றும் பிபிஏ ஆகிய 17 பாடப் பிரிவுகளில் 955 இடங்கள் உள்ளன.
இந்தப் பிரிவுகளில் சோ்க்கை பெறுவதற்கு மாணவா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய் என்ற இணையதளத்தில் மே 29 வரை விண்ணப்பிக்கலாம். இதற்காக கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாணவா் சோ்க்கை உதவி மையம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு பேராசிரியா் இரா. லட்சுமி நாராயணன் (78119 16788), க. நெப்போலியன் ( 96266 57703), தா. இவாஞ்சலின் (98657 81749) ஆகியோரைத் தொடா்புகொள்ளலாம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருத்தணி அரசு கல்லூரியில் இளநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

கலை-அறிவியல் படிப்புகள் மீது கவனம் திருப்பும் கல்லூரி மாணவா்கள்!

அரசு கலைக் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு சோ்க்கை: இன்று முதல் விண்ணப் பதிவு

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

