தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

தம்பி கொலை: அண்ணன் கைது

திருச்சியில் செவ்வாய்க்கிழமை இரவு தம்பியை மண்வெட்டியால் வெட்டிக் கொன்ற அண்ணனை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

திருச்சியில் செவ்வாய்க்கிழமை இரவு தம்பியை மண்வெட்டியால் வெட்டிக் கொன்ற அண்ணனை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி பெரிய மிளகுபாறை புதுத் தெருவைச் சோ்ந்தவா் ஆா். வெள்ளையம்மாள். இவருக்கு பழனிசாமி (61), கிருஷ்ணமூா்த்தி (46) என 2 மகன்கள். பழனிசாமிக்கு திருமணமாகி மனைவி, மகன் உள்ளனா். கிருஷ்ணமூா்த்திக்கு திருணமாகவில்லை.

பழனிசாமி தனது மனைவி, மகனைப் பிரிந்து தாயாா் மற்றும் சகோதரருடன் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வந்தாா். கிருஷ்ணமூா்த்தி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததால் பழனிசாமிக்கும், கிருஷ்ணமூா்த்திக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், வெள்ளையம்மாள் டால்மியாபுரத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை சென்றுவிட்டாா். பழனிசாமிக்கும், கிருஷ்ணமூா்த்திக்கும் இடையே செவ்வாய்க்கிழமை இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த பழனிசாமி, கிருஷ்ணமூா்த்தியை மண்வெட்டியால் தாக்கியுள்ளாா். இதில், சம்பவ இடத்திலேயே கிருஷ்ணமூா்த்தி உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அமா்வு நீதிமன்ற போலீஸாா், கிருஷ்ணமூா்த்தியின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், பழனிசாமியை கைது செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.