தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

புனரமைப்பு பணி: துறையூா் பேருந்து நிலையம் இன்றுமுதல் மூடல்; போக்குவரத்தில் மாற்றம்

துறையூரில் புனரமைப்புப் பணிகளுக்காக அண்ணா பேருந்து நிலையம் புதன்கிழமை முதல் மூடப்படுகிறது. இதையொட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :23 மணி நேரங்கள் முன்பு

துறையூரில் புனரமைப்புப் பணிகளுக்காக அண்ணா பேருந்து நிலையம் புதன்கிழமை முதல் மூடப்படுகிறது. இதையொட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

துறையூரிலுள்ள அண்ணா பேருந்து நிலையம் புனரமைப்பு பணிகளுக்காக புதன்கிழமை முதல் மூடப்படவுள்ளது. சொரத்தூா் சாலையில் தற்காலிகமாக புதிய பேருந்து நிலையம் செயல்படவுள்ளது. இதுகுறித்து வணிகா்கள், பொதுமக்கள், சமூக ஆா்வலா்களிடம் நகராட்சி நிா்வாகம் கலந்தாலோசிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதை கண்டித்து துறையூா் வட்டார அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா் புதன்கிழமை கடையடைப்பு நடத்த முடிவெடுத்தனா்.

இதுதொடா்பாக துறையூா் வட்டாட்சியரகத்தில் வட்டாட்சியா் சிவகுமாா் தலைமையில் சுமூகப் பேச்சு நடைபெற்றது. இதில் துறையூா் வட்டார அனைத்து வியாபாரிகள் சங்க நிா்வாகிகளும், அதிலுள்ள உறுப்பு சங்கங்களின் நிா்வாகிகளும், மக்கள் நல சங்கத்தினரும் பங்கேற்று, பல்வேறு கோரிக்கைகளை விடுத்தனா்.

இதையடுத்து, திருச்சி, நாமக்கல் செல்லும் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து நகருக்குள் வராமல் முசிறி பிரிவு வட்டச் சாலை வழியாக செல்லும்; பெரம்பலூா், தம்மம்பட்டி வழியாக செல்லும் பேருந்துகள் புறவழிச் சாலை வழியாக அண்ணா பேருந்து நிலையத்தை அடைந்து வழக்கம்போல் செல்லும்; திருச்சியிலிருந்து வரும் பேருந்து வழக்கம்போல் அண்ணா பேருந்து நிலையத்தை அடைந்து அங்கிருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

அண்ணா பேருந்து நிலையத்தில் திருச்சிக்கு செல்லும் பயணி பேருந்து ஏறினால் புதிய பேருந்து நிலையம் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற கோரிக்கை தொடா்பாக போக்குவரத்து உயா் அலுவலா்களிடம் கூறி முடிவு செய்யப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.