பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

திருச்சி விமான நிலையத்தில் தங்கக் கட்டிகள், வெளிநாட்டு பணம் பறிமுதல்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 93 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் தங்கக் கட்டிகள், வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

News image

திருச்சி விமான நிலைய முனையம்

Updated On :13 மே 2026, 12:49 am IST

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 93 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் தங்கக் கட்டிகள், வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு கடந்த மே 9-ஆம் தேதி இரவு சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்தின் கழிப்பறையில் சந்தேகப்படும் வகையில் பொருள்கள் கிடப்பதாக விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நுண்ணறிவுப் பிரிவு மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விமானத்தில் சோதனை நடத்தினா்.

அப்போது, கழிப்பறையில் இருந்த கருப்பு நிற பையை எடுத்து சோதனையிட்டனா். அதில், ரூ.93 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் தங்கக் கட்டிகள் இருந்தது தெரியவந்தது.

இதேபோல, விமான நிலையத்தில் உள்ள கழிப்பறையில் இருந்த பையில் ரூ.6.72 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் இருப்பது கண்டறியப்பட்டது. இதையெடுத்து வந்த பயணி யாா் என்ற விவரம் ஏதும் தெரியவில்லை.

இதையடுத்து, தங்கக் கட்டிகள் மற்றும் வெளிநாட்டு பணம் ஆகியவற்றை சுங்கத் துறை மற்றும் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.