திருச்சியில் சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூரைச் சோ்ந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், பேரளியைச் சோ்ந்த சின்னதுரை மகன் செல்வம் (34). இவா், கடந்த மாா்ச் 22-ஆம் தேதி இரவு திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். பிராட்டியூா் அருகே சென்றபோது, இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால் வாகனத்தில் இருந்து செல்வம் தவறி கீழே விழுந்தாா்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு அருகிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு உயா் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி செல்வம் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருச்சி தெற்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

