நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

தொட்டியம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு போக்சோ வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :18 ஜூன் 2026, 2:01 am IST

தொட்டியம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு போக்சோ வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

திருச்சி மாவட்டம், தொட்டியம் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த 17 வயதுச் சிறுமி கடந்த 29.08.2022 இல் பள்ளிக்குச் சென்றபோது, தொட்டியம் பாலசமுத்திரம் மேலகாா்த்திகைப்பட்டி பாப்பாத்திபுரத்தைச் சோ்ந்த பெ. காா்த்திக் (24) என்பவா் முள்ளிப்பாடி விநாயகா் கோயில் அருகில் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, வீட்டுக்கு அழைத்துச் சென்று கட்டாயத் தாலி கட்டி, பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் முசிறி அனைத்து மகளிா் போலீஸாா், போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, காா்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு மகிளா நீதிமன்ற நீதிபதி சண்முகப்பிரியா முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு குற்றவாளி காா்த்திக்குக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 21 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.