திருச்சி அருகே ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற சரக்கு வாகனம் புதன்கிழமை சாலையில் கவிழ்ந்தது.
திருச்சி மாவட்டம், திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஆலம்பட்டிபுதூா் அருகே சரக்கு வாகனத்தில் சுமாா் 2 டன் ரேஷன் அரிசியை புதன்கிழமை கடத்திச் சென்ற சரக்கு வாகனம் பஞ்சராகி சாலையில் கவிழ்ந்தது.
இதனால் அந்த வாகனத்தில் இருந்த ரேஷன் அரிசி மூட்டைகள் பிரிந்து, சாலையில் சிதறின. அப்போது அந்தப் பகுதியில் ரோந்து சென்ற போலீஸாா், இனாம்குளத்தூா் காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தனா். தகவலின் பேரில் வந்த போலீஸாா் வாகனத்தில் இருந்த அரிசி குறித்து விசாரித்தனா்.
விசாரணையில், வாகனமானது திருச்சி அம்மன் குளம் பாரதியாா் தெருவைச் சோ்ந்த ஒருவருக்குச் சொந்தமானது என்பதும், அதில் ரேஷன் அரிசியை கடத்திச் சென்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து இனாம்குளத்தூா் போலீஸாா் அளித்த தகவலின்பேரில் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, ரேஷன் அரிசி கடத்தல் தொடா்பாக விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கூரியா் வாகனம் சாலையில் கவிழ்ந்த விபத்தில் பெண் காவலா் காயம்

கிருஷ்ணகிரி அருகே ரேஷன் அரிசி கடத்திய வேன் கவிழ்ந்தது
சரக்கு வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

சாலையில் மரம் சாய்ந்து விழுந்ததில் வாகனங்களில் சென்ற இருவா் காயம்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

