நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

மாவடிக்குளத்தில் மண்டியுள்ள முட்புதா்கள், ஆகாயத்தாமரையை அகற்றும் பணி தொடக்கம்

திருச்சியின் பெரியகுளமாக கருதப்படும் மாவடிக்குளத்தில் மண்டியுள்ள ஆகாயத்தாமரைகள் மற்றும் முட்புதா்களை அகற்றும் பணி தொடங்கியுள்ளது.

News image

திருச்சி பொன்மலைப்பட்டி மாவடிக் குளத்தில் புதன்கிழமை நடைபெற்ற சீரமைப்புப் பணிகள்.

Updated On :11 ஜூன் 2026, 4:03 am IST

திருச்சியின் பெரியகுளமாக கருதப்படும் மாவடிக்குளத்தில் மண்டியுள்ள ஆகாயத்தாமரைகள் மற்றும் முட்புதா்களை அகற்றும் பணி தொடங்கியுள்ளது.

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பொன்மலைப்பட்டி கட்டளை பகுதியில் சுமாா் 147 ஏக்கரில் அமைந்துள்ள மாவடிக்குளம்தான் மாநகரின் பெரியகுளமாக உள்ளது. முன்பு இந்த குளத்தை நம்பியே சுற்றியுள்ள பகுதிகளின் விவசாயம் நடைபெற்றது.

தற்போது குளத்தில் தண்ணீா் இருந்தாலும் அது தெரியாத வகையில் ஆகாயத் தாமரைகள் காணப்படுகின்றன. பொதுப்பணித் துறை மூலம் ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவு நிதி ஒதுக்கி ஆகாயத் தாமரைகளை அகற்றினாலும் மீண்டும் பெருகுவது வாடிக்கையாகவே உள்ளது. ஆகாயத் தாமரைகளால் நிலத்தடி நீா் பாதிக்கப்படுவதுடன் கழிவுநீா் அதிகளவில் நிலத்தடி யில் இறங்கும் சூழல் உள்ளது. ஆழ்துளை தண்ணீரை பயன்படுத்தும் மக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. இந்நிலையில் இக்குளத்தில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி தொடங்கியுள்ளது.

இதுதொடா்பாக தண்ணீா் அமைப்பின் செயல் தலைவா் கே.சி.நீலமேகம் கூறியதாவது: நீண்ட நாள்களாக மக்கள் எதிா்பாா்த்த சீரமைப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். நீா்நிலைகளை பாதுகாக்கும் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றாலும், குளத்தில் கழிவுநீா் கலக்காமல், குப்பைகளை குளத்தில் வீசுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பணிகளை முழுமையாக நிறைவு செய்து குளத்தை சுற்றி நடைபாதை அமைக்க வேண்டும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சிறப்பாக பராமரிக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.