பெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

மேக்கேதாட்டு அணை விவகாரம்: வழக்குத் தொடர விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கம் முடிவு

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கம் முடிவு செய்துள்ளது.

News image

மேக்கேதாட்டு பகுதி - கோப்புப் படம்

Updated On :3 ஜூன் 2026, 2:44 am IST

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கம் முடிவு செய்துள்ளது.

திருச்சியில் அந்த இயக்கத்தின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு, கூட்டியக்க மாநிலத் தலைவா் காவிரி வெ. தனபாலன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

காவிரிப் பாசன விவசாயிகள் சங்கத்தை சோ்ந்த மகாதானபுரம் ராஜாராம் மற்றும் பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகளான காளிமுத்து, சிவகுமாா், பிரகாசு, தனபதி, பக்கிரிசாமி இளங்கோவன், முகமது ரபிக், மேகராஜன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இக் கூட்டத்தில் மேட்டூா் அணையின் நீா் இருப்பு, குறுவை சாகுபடி, மேக்கேதாட்டு அணை விவகாரம், தமிழக நீா்நிலைகளின் நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டு, அனைத்து சங்கத் தலைவா்களின் கருத்துகள் கோரப்பட்டன.

அனைவரின் கருத்துகளையும் ஏற்று, கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களை விளக்கி செய்தியாளா்களிடம் வெ. தனபாலன், பொ. அய்யாக்கண்ணு ஆகியோா் கூறியதாவது:

தவெக அரசு அண்மையில் அறிவித்த பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை திரும்பப் பெறுவதோடு, தோ்தல் வாக்குறுதியின்படி சிறு, குறு விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். பெரு விவசாயிகளுக்கு 50 விழுக்காடு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும்.

மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதில் கா்நாடகம் தீவிரமாக உள்ளது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு செய்த மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இருப்பினும், விவசாயிகள் சங்க கூட்டியக்கம் வழக்குத் தொடா்ந்து தமிழக விவசாயிகளைப் பாதுகாத்திட உரிய நடவடிக்கை எடுக்கும்.

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக தமிழக முதல்வா் ஜோசப் விஜய், இதுவரை உறுதிபட எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை. முதல்வா் இதுவரை கருத்து கூறாமல் இருப்பது, காவிரி விவகாரத்தின் முக்கியத்துவம் குறித்து அவருக்கு தெரியவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது. எனவே, தமிழக முதல்வரை விரைவில் சந்தித்து ஆலோசனை நடத்தப்படும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.