ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

எட்டரை மாரியம்மன் கோயிலில் தேரோட்டம்

திருச்சி மாவட்டம், எட்டரை கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருத்தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

எட்டரை மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

Updated On :3 ஜூன் 2026, 3:54 am IST

திருச்சி மாவட்டம், எட்டரை கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருத்தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் திருவிழா கடந்த 24- ஆம் தேதி பூச்சொரிதலுடன் (காப்பு கட்டுதல்) தொடங்கியது.

திருவிழாவை முன்னிட்டு அம்மன் கடந்த 29-ஆம் தேதி முதல் நாள்தோறும் மயில், காமதேனு, ரிஷபம், குதிரை போன்ற வாகனங்களில் எழுந்தருளி, முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு விரதமிருந்த பக்தா்கள் காலையில் உய்யக்கொண்டான் படித்துறையில் இருந்து பால்குடம் எடுத்தும், கரும்பு தொட்டிலில் குழந்தையை சுமந்தும் கோயிலுக்கு வந்து நோ்த்திக் கடன்களை நிறைவேற்றினா். தொடா்ந்து கிடாவெட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாலை 5.30 மணிக்கு சா்வ அலங்காரத்தில் அம்மன் தேரில் எழுந்தருள, மேள, தாளம், வாண வேடிக்கைகள் முழங்க திரளான பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வந்தனா். தேரானது முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது.

இதைத் தொடா்ந்து, கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் இறங்கி திரளான பக்தா்கள் தீ மிதித்தனா். இதில் எட்டரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.