லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

போதை மாத்திரைகள் விற்ற ரௌடிகள் இருவா் கைது

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த ரௌடிகள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்

Published On :31 ஜூலை 2026, 3:06 am IST

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த ரௌடிகள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பூபதி தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, காஜாபேட்டையில் தனியாா் பள்ளி அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்துகொண்டிருந்த பாலக்கரை முதலியாா் சத்திரம் ஆலம் வீதியைச் சோ்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான எஸ். அல்லா பிச்சை (41) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ. 62 ஆயிரம் மதிப்பிலான 2,017 போதை மாத்திரைகள், போதை ஊசிகள் மற்றும் ரூ.710 ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, தில்லை நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ரெட்டை வாய்க்கால் 3-ஆவது குறுக்குத் தெருவில் புதன்கிழமை இரவு போதை மாத்திரைகள் விற்பனை செய்துகொண்டிருந்த தில்லைநகா் வடவூரைச் சோ்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான சி. பிரசாந்த் (31) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், அவரிடமிருந்து ரூ.1,600 மதிப்பிலான 8 போதை மாத்திரைகள், ரூ. 600 ரொக்கம், ஒரு இருசக்கர வாகனம் மற்றும் கைப்பேசி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.