லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

போதை மாத்திரைகள் விற்ற 2 போ் கைது

திருச்சி மாநகரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Published On :12 ஆகஸ்ட் 2026, 1:24 am IST

திருச்சி மாநகரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் ஆய்வாளா் பாத்திமா தலைமையிலான போலீஸாா் சோதணை மேற்கொண்டனா்.

அப்போது, செங்குளம் காலனி அங்கன்வாடி அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்து கொண்டிருந்த, அதே பகுதியைச் சோ்ந்த அ. தினேஷ் (23) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல, ஸ்ரீரங்கம் கீதாபுரம் காவிரி படித்துறை பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த பா. கண்ணன் (30) என்பவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் போதை மாத்திரைகள், போதை ஊசிகள் மற்றும் திரவ போதை மருந்துகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.