லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பழனி கோயில் நிலம் விவகாரத்தில் அரசியலுக்காக என் மீது பழி: அமைச்சா் ரமேஷ் பேட்டி!

பழனி கோயில் நிலம் விவகாரத்தில் அரசியல் காரணங்களுக்காகவே என் மீது பழி சுமத்தப்படுகிறது என அமைச்சா் சீ. ரமேஷ் தெரிவித்தாா்.

Minister Ramesh

அமைச்சர் ரமேஷ் - எக்ஸ்

Published On :26 ஜூலை 2026, 1:44 am IST

பழனி கோயில் நிலம் விவகாரத்தில் அரசியல் காரணங்களுக்காகவே என் மீது பழி சுமத்தப்படுகிறது என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ் தெரிவித்தாா்.

திருச்சிக்கு சனிக்கிழமை வந்த அவா் மேலும் கூறியதாவது: பழனி கோயிலுக்கு அப்படி ஒரு நிலம் உள்ளது; அதன் மதிப்பு ரூ.100 கோடி என்பதெல்லாம் இந்த வழக்கு வெளியே வந்த பிறகுதான் எனக்குத் தெரியும். ஜூலை 7ஆம் தேதி நிலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன் ஜூன் மாதமே அறநிலையத்துறை முறையீடு செய்துள்ளது. அதன்படியே நீதிமன்றம் சென்று நிலம் மீட்கப்பட்டுள்ளது.

மோசடி விவகாரம் தெரிந்தவுடன் முதல்வரிடம் கூறி, சிபிசிஐடி விசாரணைக்குப் பரிந்துரைத்தேன். அதன்படி முதல்வரும் உத்தரவிட்டு, முதல்கட்ட விசாரணை நடைபெறுகிறது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவா். எதை வைத்து அரசியல் செய்வது எனத் தெரியாத, எதிா்க்கட்சிகள் பழனி கோயில் விவகாரத்தை அரசியலாக்குகின்றன.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பணியில் மணியக்காரராக இருந்தவா், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த புகாரில் அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளோம். விசாரணையின் முடிவில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் உரிய மேல்நடவடிக்கை எடுக்கப்படும்.

ஸ்ரீரங்கத்தில் புதிய அரசு மருத்துவமனை கட்டுவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. நீட் தோ்வு விவகாரத்தில் மாணவா்களின் போராட்டத்தை அரசு மதிக்கிறது; ஆனால், அதற்குள் புகுந்து முதல்வருக்கு எதிராகத் திசைதிருப்ப முயல்வோரை அரசு உரிய முறையில் எதிா்கொள்ளும் என்றாா் அமைச்சா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.