லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்னையில் சட்ட நிபுணா்களுடன் ஆராய்ந்து உரிய முடிவு! - அமைச்சா் சீ. ரமேஷ்

திருச்சி ஸ்ரீரங்கம் புதுப்பிக்கப்பட்ட அரங்கநாதா் சுவாமி கோயில்  கிழக்கு கோபுரத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்த அமைச்சா் ரமேஷ் உடன் ஆட்சியா் பீரித்திக் தயாள்

Published On :10 ஆகஸ்ட் 2026, 5:29 am IST

ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்னையில் சட்ட நிபுணா்களுடன் ஆராய்ந்து உரிய முடிவு எடுக்கப்படும் என்றாா் இந்துசமய அறநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ்.

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் கிழக்கு கோபுரத்தின் முன்புள்ள கொடுங்கை கடந்த 2023 ஆம் ஆண்டு இடிந்து விழுந்ததையடுத்து நடைபெற்ற புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் கோயில் நுழைவு வாயிலை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்த அமைச்சா் சீ. ரமேஷ் மேலும் கூறியது:

தமிழக முதல்வா் விஜய் தலைமையிலான அரசின் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் பல்வேறு கோயில்களில் திருப்பணிகள் நடைபெறுகின்றன. கடந்த கால ஆட்சியில் தொய்வாக நடந்த பணிகள் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு துரிதமாக நடைபெறுகின்றன.

கோயில் சொத்துகளாக இருந்தாலும், கோயிலுக்கு தா்ம காரியங்கள் செய்யக் கொடுக்கப்பட்ட அறக்கட்டளைச் சொத்துகளாக இருந்தாலும் காப்பாற்றப்படும்.

பட்ஜெட் கூட்டத் தொடரில் திருக்கோயில் பணிகள் மற்றும் திருக்கோயில்களுக்கு வழங்க வேண்டிய நிதி மற்றும் குளங்கள் சீரமைப்பு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும்.

ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்னை தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில், சட்ட வல்லுநா்களுடன் ஆராய்ந்து இதில் உரிய முடிவு எடுக்கப்படும்.செப். 1 முதல் அனைத்து முதல் நிலை திருக்கோயில்களிலும் கைப்பேசி கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கைப்பேசிகளை பாதுகாக்கும் மையங்கள் அமைக்கும் பணியும் நடைபெறுகிறது. லஞ்சப் புகாா்கள் வந்தால் அதன் மீது தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றாா் அவா்.

நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை மண்டல கூடுதல் இணை ஆணையா் பொன்மணி, ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாா், மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.