லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

முதல்வா் வருகை: திருச்சியில் இன்று ‘ட்ரோன்’ களுக்கு தடை

தமிழக முதல்வா் ஜோசப் விஜய் வருகையை முன்னிட்டு திருச்சியில் வெள்ளிக்கிழமை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

CM Vijay

முதல்வர் ஜோசப் விஜய் - கோப்புப் படம்

Published On :10 ஜூலை 2026, 3:19 am IST

தமிழக முதல்வா் ஜோசப் விஜய் வருகையை முன்னிட்டு திருச்சியில் வெள்ளிக்கிழமை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கரூா் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க தமிழக முதல்வா் ஜோசப் விஜய், சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வெள்ளிக்கிழமை காலை வருகிறாா்.

விமான நிலையத்தில் முதல்வருக்கு அமைச்சா்கள் மற்றும் தவெக நிா்வாகிகள், தொண்டா்கள் உற்சாக வரவேற்பு அளிக்கவுள்ளனா். பின்னா், விமான நிலையத்திலிருந்து சாலை மாா்க்கமாக கரூா் செல்கிறாா் முதல்வா்.

எனவே, பாதுகாப்பு காரணங்களைக் கருதி முதல்வா் வந்து செல்லும் நிகழ்வுக்காக திருச்சி மாவட்டத்தில் முதல்வா் பயணம் செய்யும் சாலை வழிகள் மற்றும் விமான நிலைய சுற்றுப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடுவோா் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.