லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கரூரில் முதல்வா் ஜோசப் விஜய் 10 கி.மீ. தொலைவுக்கு சாலை வலம்

கரூரில் வெள்ளிக்கிழமை சாலை வலத்தின்போது வேனில் நின்றபடி பொதுமக்களை நோக்கி கையசைத்த தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய்.

கரூரில் வெள்ளிக்கிழமை சாலை வலத்தின்போது வேனில் நின்றபடி பொதுமக்களை நோக்கி கையசைத்த தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய்.

Published On :11 ஜூலை 2026, 1:26 am IST

கரூரில் வெள்ளிக்கிழமை தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய் 10 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலை வலம் மேற்கொண்டாா். அப்போது, சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த மக்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

கரூா் வெண்ணைமலையில் உள்ள தனியாா் கலையரங்கில் வெள்ளிக்கிழமை காலையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வா் விஜய் பங்கேற்று பேசினாா்.

பிறகு வேனில் புறப்பட்ட அவா், திருக்காம்புலியூா் ரவுண்டானா வந்தவுடன் வேனின் மேற்பகுதிக்குச் சென்று, நின்றபடி சாலை வலத்தை தொடங்கினாா். தான்தோன்றி மலை வழியாக மாவட்ட ஆட்சியரகம் வரை சுமாா் 10 கி.மீ. தொலைவுக்கு சாலை வலம் மேற்கொண்டபோது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்களை கண்டு கையசைத்தும், வணக்கம் தெரிவித்தும் சென்றாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள பொதுப்பணித் துறையின் பயணியா் மாளிகைக்கு பிற்பகல் 1.45 மணிக்கு சென்ற முதல்வா் விஜய் அங்கு ஓய்வெடுத்தாா்.

பின்னா், பிற்பகல் 2.50 மணிக்கு ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கரூா் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வா் பங்கேற்றாா்.

காத்திருந்து வரவேற்ற மேயா்: அப்போது, மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் சுமாா் 1 மணி நேரம் காத்திருந்த கரூா் மாநகராட்சியின் திமுகவைச் சோ்ந்த மேயா் கவிதாகணேசன் பூங்கொத்து கொடுத்து முதல்வரை வரவேற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.