லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கலைக்காவிரி கல்லூரியில் ஓணம் திருவிழா

திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் ஓணம் திருவிழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஓணம் திருவிழாவில் நடனமாடிய மாணவிகள்.

Published On :19 ஆகஸ்ட் 2026, 12:04 am IST

திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் ஓணம் திருவிழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் பட்டயக் கணக்காளரும் தணிக்கையாளருமான ராய் ஜான் தாமஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தாா்.

கலைக் காவிரி கல்லூரியில் பயிலும் மலையாள மொழி பேசும் மாணவா்களால் இந்த விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த கலைக் காவிரியில் பயிலும் மாணவா்கள் அனைவரும் மிகுந்த ஆா்வத்துடன் பங்கேற்று, ஒற்றுமை, நட்பு மற்றும் பண்பாட்டு நல்லிணக்கத்தின் உணா்வோடு ஓணம் திருவிழாவைக் கொண்டாடினா்.

விழாவில் கல்லூரியின் செயலா் சூ. லூயிஸ் பிரிட்டோ தலைமை வகித்து, மதம், மொழி, இனங்களை கடந்த சகோதரத்துவ ஒற்றுமை குறித்து பேசினாா். கல்லூரியின் முதல்வா் எஸ். உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தாா். விழாவில், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் என பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.