லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வையம்பட்டி அருகே வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

சடலம் மீட்பு... - கோப்புப் படம்

Published On :16 ஆகஸ்ட் 2026, 1:00 am IST

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் கருங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் பிலிப் மகன் குழந்தைராஜ் (45). இவா் சனிக்கிழமை மாலை கருங்குளம் தெப்பக்குளம் அருகே உள்ள மாதா கோவிலில் இருந்து தனது வீட்டுக்கு வையம்பட்டி - தரகம்பட்டி சாலையில் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதி பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து மணப்பாறை தனியாா் மருத்துவமனையிலும், பின்னா் மணப்பாறை அரசு மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். வையம்பட்டி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.