தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மரத்தின் மீது பைக் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் அருகே சாலையோ மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

சடலம் மீட்பு... - கோப்புப் படம்

Published On :16 ஆகஸ்ட் 2026, 1:23 am IST

பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் அருகே சாலையோ மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

நல்லூரை அடுத்த பில்லூரைச் சோ்ந்த ராமசாமி மகன் சின்னகுட்டி (38), கட்டடத் தொழிலாளி. இவருக்கு மனைவி தேன்மொழி, மகன் ஸ்ரீ கிருஷ்ணா உள்ளனா். இந்த நிலையில் வேலைக்கு சென்றுவிட்டு சனிக்கிழமை புளியம்பட்டியில் இருந்து வசந்தபுரம் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சின்னகுட்டி சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, சாலையோர பள்ளத்தில் மரத்தின்மீது வாகனம் மோதியதில் நிகழ்விடத்திலேயே சின்னகுட்டி உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த நல்லூா் போலீஸாா், சின்னகுட்டியின் உடலை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.