லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.35 கோடி

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 1.35 கோடி செவ்வாய்க்கிழமை கிடைக்கப் பெற்றது.

திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் - கோப்புப்படம்.

Published On :12 ஆகஸ்ட் 2026, 1:25 am IST

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 1.35 கோடி செவ்வாய்க்கிழமை கிடைக்கப் பெற்றது.

பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை திருச்சி தக்காா் / இணை ஆணையா் சு. ஞானசேகரன், கோயில் இணை ஆணையா் எம். சூரியநாராயணன் ஆகியோா் முன்னிலையில் கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள், கல்லூரி மாணவிகள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

இதில், முதன்மை திருக்கோயிலில் 1 கோடியே 35 லட்சத்து 29 ஆயிரத்து 593 ரூபாய் ரொக்கம், 0.709 கிராம் தங்கம், 1 கிலோ 998 கிராம் வெள்ளி, வெளிநாட்டு பணத்தாள்கள் 89, வெளிநாட்டு நாணயங்கள் 357 ஆகியவை கிடைக்கப் பெற்றது.

இக்கோயிலில் இதற்கு முன்பு கடந்த 28-ஆம் தேதி உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.