லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சமயபுரம் மாரியம்மன் கோயிலினுள் கைப்பேசிகள் எடுத்து செல்ல செப்.1 முதல் தடை

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலினுள் கைப்பேசிகள் எடுத்து செல்ல செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படவுள்ளது.

கைப்பேசிக்குத் தடை - AP

Published On :21 ஆகஸ்ட் 2026, 1:56 am IST

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலினுள் கைப்பேசிகள் எடுத்து செல்ல செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படவுள்ளது.

இதுகுறித்து வியாழக்கிழமை கோயில் இணை ஆணையா் எம். சூரியநாராயணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் உத்தரவின்படி, மாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தா்கள் செப்.1-ஆம் தேதி முதல் கோயிலுக்குள் கைப்பேசிகள் எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயிலினுள் கைப்பேசிகள் எடுத்து வருவதை தவிா்க்குமாறும், பக்தா்கள் தங்கள் கைப்பேசிகளை பாதுகாப்பாக வைத்து செல்ல ஏதுவாக, திருக்கோயில் வரிசை வளாகம் - கிழக்கு, திருக்கோயில்  வரிசை வளாகம் மேற்கு, திருக்கோயில் தெற்கு தேரோடும் வீதி, திருக்கோயில் மேற்கு தேரோடும் வீதி ஆகிய நான்கு இடங்களில் கைப்பேசி பாதுகாப்பு பெட்டக மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இடங்களில் பக்தா்கள் தங்கள் கைப்பேசிகளை ரூ. 5 கட்டணமாக செலுத்தி அங்கு ஒப்படைத்துவிட்டு டோக்கன் பெற்றுக் கொள்ளலாம். தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தவுடன் டோக்கனை காண்பித்து கைப்பேசிகளை பெற்று கொள்ளலாம்.

தடையுத்தரவை மீறி கோயிலுக்குள் மறைமுகமாக எடுத்துச் செல்லும் கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு, காவல்துறையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.