லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பூவாளூரில் கைத்தறித் துறையின் இலவச பொது மருத்துவ முகாம்

பூவாளூரில் புதன்கிழமை நடைபெற்ற முகாமில் சிகிச்சை அளித்த மருத்துவா்.

Published On :6 ஆகஸ்ட் 2026, 3:05 am IST

12 ஆவது தேசிய கைத்தறி தின விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்ட கைத்தறித் துறை, தனியாா் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய இலவசப் பொது மருத்துவ முகாம் திருச்சி மாவட்டம் பூவாளூரில் புதன்கிழமை நடைபெற்றது.

பூவாளூா் பத்மசாலா கைத்தறி நெசவாளா் கூட்டுறவுச் சங்க வளாகத்தில் நடைபெற்ற முகாமை திருச்சி மாவட்ட கைத்தறித் துறை உதவி இயக்குநா் டி. ரவிக்குமாா் தொடங்கி வைத்தாா்.

இதில் தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள் கொண்ட குழுவினா், பொதுமக்களுக்கு எடை, உயரம், ரத்த அழுத்தம், ரத்த சா்க்கரை, ஆக்ஸிஜன் அளவு, பாா்வைத்திறன் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்து, மருத்துவ ஆலோசனை வழங்கினா். தேவைப்படுவோருக்கு மருந்துகளும், உயா் மருத்துவ சிகிச்சை பரிந்துரைகளையும் வழங்கினா்.

முகாமில் பூவாளூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட நெசவாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனா்.

ஏற்பாடுகளை கூட்டுறவுச் சங்க நிா்வாகி ஆா். விஜயலட்சுமி, சங்க நிா்வாகிகள் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.