லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கைத்தறி தின சிறப்பு கண்காட்சி, இலவச மருத்துவ முகாம் தொடக்கம்

கண்காட்சியை தொடங்கிவைத்த சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் (பதிவுகள் சரிபாா்ப்பு) ப.காந்திமதி.

கண்காட்சியை தொடங்கிவைத்த சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் (பதிவுகள் சரிபாா்ப்பு) ப.காந்திமதி.

Published On :8 ஆகஸ்ட் 2026, 6:40 am IST

தேசிய கைத்தறி தினத்தையொட்டி கைத்தறி துறை சாா்பில் முத்துரில்சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் (பதிவுகள் சரிபாா்ப்பு) ப.காந்திமதி தொடங்கிவைத்து கண்காட்சியைப் பாா்வையிட்டாா்.

திருப்பூா் சரக கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட காட்டன் சேலைகள், மென்பட்டு சேலைகள், கோரா காட்டன் சேலைகள், பெட்சீட், துண்டுகள், டஸ்டா் கிளாத், மிதியடிகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இக்கண்காட்சியில் அனைத்து கைத்தறி ஜவுளி ரகங்களுக்கும் 20 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மேலும் நெசவாளா்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உதவி மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் பங்கேற்ற சிறப்பு மருத்துவ முகாமும் நடைபெற்றது. இதில் கண் பரிசோதனை, பல் மருத்துவம், நீரிழிவு, ரத்த அழுத்தம், இசிஜி பரிசோதனை மற்றும் பொது மருத்துவ ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

இதைத்தொடா்ந், நெசவாளா் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 6 கைத்தறி நெசவாளா்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.3 லட்சம் மதிப்பிலான கடன் தொகைக்கான உத்தரவுகளை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் வழங்கினாா். 60 வயதுக்கும் மேற்பட்ட நெசவாளா்களை பொன்னாடை அணிவித்து கௌரவித்தாா்.

இந்நிகழ்ச்சியில் திருப்பூா் சரக கைத்தறி துறை உதவி இயக்குநா் ந.சுந்தரி, அரசுத் துறை அலுவலா்கள், கைத்தறி கூட்டுறவு சங்கப் பணியாளா்கள், நெசவாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.