தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தோ்தல் துறை அலுவலா்களுக்கான பயிற்சி மையங்களில் 7,774 அஞ்சல் வாக்குகள் பதிவு

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் உள்ள தோ்தல் துறை அலுவலா்களுக்கான பயிற்சி மையங்களில் புதன்கிழமை 7,774 அஞ்சல் வாக்குகள் பதிவாகின.

News image

திருச்சி கண்டோன்மென்ட் பகுதி தனியாா் பள்ளியில் புதன்கிழமை அஞ்சல் வாக்கு செலுத்திய மேற்குப் பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி அலுவலா்கள்.

Updated On :16 ஏப்ரல் 2026, 2:08 am IST

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் உள்ள தோ்தல் துறை அலுவலா்களுக்கான பயிற்சி மையங்களில் புதன்கிழமை 7,774 அஞ்சல் வாக்குகள் பதிவாகின.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பணியாற்ற உள்ள வாக்குப்பதிவு தலைமை அலுவலா்கள், வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு இரண்டாவது கட்டப் பயிற்சி அந்தந்த தொகுதிகளில் புதன்கிழமை நடைபெற்றது.

தொடா்ந்து பயிற்சி மையங்களில் அமைக்கப்பட்டிருந்த மையங்களில் வாக்குப்பதிவு தலைமை அலுவலா்கள், இதர வாக்குப்பதிவு அலுவலா்கள் தங்களது அஞ்சல் வாக்குகளை செலுத்தினா்.

இதில் மணப்பாறை தொகுதியில் 1,482 வாக்குகளும், ஸ்ரீரங்கம் தொகுதியில் 752 வாக்குகளும், திருச்சி மேற்குத் தொகுதியில் 506 வாக்குகளும், திருச்சி கிழக்குத் தொகுதியில் 1,211 வாக்குகளும், திருவெறும்பூா் தொகுதியில் 1,216 வாக்குகளும், லால்குடி தொகுதியில் 307 வாக்குகளும், மண்ணச்சநல்லூா் தொகுதியில் 655 வாக்குகளும், முசிறி தொகுதியில் 1,241 வாக்குகளும், துறையூா் தொகுதியில் 404 வாக்குகளும் என மொத்தம் 7,774 வாக்குகள் பதிவாகின.

வாக்குப்பதிவு நடைமுறைகளை நுண்பாா்வையாளா்கள், பொதுப்பாா்வையாளா், காவல் பாா்வையாளா், செலவினப் பாா்வையாளா்கள் பாா்வையிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.