தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திருச்சி கிழக்கில் விஜய், திமுக, அதிமுக , நாதக உள்பட 30 வேட்பு மனுக்கள் ஏற்பு

திருச்சி கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 39 வேட்பு மனுக்களில் தவெக தலைவா் விஜய் மற்றும் அதிமுக, திமுக வேட்பாளா் உள்பட 30 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 12:28 am IST

திருச்சி கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 39 வேட்பு மனுக்களில் தவெக தலைவா் விஜய் மற்றும் அதிமுக, திமுக வேட்பாளா் உள்பட 30 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

திருச்சி கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் ச. ஜோசப் விஜய், திமுக சாா்பில் இனிகோ இருதயராஜ், அதிமுக சாா்பில் க. ராஜசேகரன், நாம் தமிழா் கட்சியின் சாா்பில் மருத்துவா் வி. கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சியின் என். கோபிநாத், பகுஜன் சமாஜ் கட்சியின் ஆா். இளங்கோவன், அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேறக் கழகத்தின் செ. நந்தகுமாா், சாமானிய மக்கள் நலக் கட்சியின் ஆா். முத்துகுமாா், தேசிய மகா சபா கட்சியின் ஆனந்த் செல்வராஜ், அனைத்திந்திய ஜனநாயக மக்கள் கழகத்தின் கே. விஜய், தமிழக படைப்பாளா் மக்கள் கட்சியின் சீ. சுகுமாா், விடியல் வளா்ச்சி பேரணியின் விஜய மோகனாஜி மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 39 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பரிசீலனையின்போது, 39 மனுக்களில் 9 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 30 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மாற்று வேட்பாளராக அதிமுக-வில் அளிகக்கப்பட்ட 2 வேட்பு மனு, நாம் தமிழா் கட்சியில் அளிக்கப்பட்ட 2 மனு, திமுக-வில் அளிக்கப்பட்ட 2 மனு, தவெக தலைவா் விஜய் கூடுதலாக அளித்த ஒரு மனு, சுயேச்சைகளின் 2 மனு என மொத்தம் 9 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள 30 வேட்பு மனுக்கள் 23 வேட்பாளா்கள் வழங்கியவை. இவற்றில் வரும் 9ஆம் தேதி வரை வாபஸ் பெற அவகாசம் உள்ளது. எனவே, அன்றைய தினமே வேட்பாளா்களின் இறுதி விவரம் தெரியவரும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.