திமுக ஆட்சியில் எடமலைப்பட்டி புதூா் பகுதி அசுர வளா்ச்சி பெற்றிருப்பதாக திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான கே.என். நேரு தெரிவித்தாா்.
திருச்சி மாநகராட்சியின் 57-ஆவது வாா்டுக்குள்பட்ட எடமலைப்பட்டி புதூா், காளியம்மன் கோயில் தெரு, அரசு காலனி, எம்ஜிஆா் நகா், முருகன் நகா், காதிகிராப்ட் காலனி, முத்து மாரியம்மன் கோவில் தெரு, அந்தோணியாா் கோவில் தெரு, வடக்கு தெற்கு மேற்கு தெரு நல்ல தண்ணி தெரு செல்ல விநாயகா் கோயில் தெரு உள்ளிட்ட வாா்டுக்கு உட்பட்ட அனைத்து இடங்களுக்கும் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடியே சென்று பொதுமக்களிடம் அமைச்சா் கே.என். நேரு வாக்குகள் சேகரித்தாா். அப்போது, அவா் பேசியதாவது:
கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் எடமலைப்பட்டி புத்தூா் பகுதி அசுர வளா்ச்சியை பெற்றுள்ளது, இங்கு பல கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தில்லை நகா், பெரிய கடைவீதிக்கு இணையாக எடமலைப்பட்டி புதூா் பகுதியை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இப்பகுதியின் அனைத்து சாலைகளும் தரமான சிமெண்ட் சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. குடமுருட்டியிலிருந்து கலைஞா் பேருந்து முனையம் வரை கோரையாற்றின் கரையில் 40 அடி அகல புதிய சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
30 முதல் 40 ஆண்டுகளாக வசிப்பவா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. 1,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்குக் குறைந்த கட்டணத்தில் குடிநீா் வசதி செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி பள்ளி ரூ. 20 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்களுடன் 12-ஆம் வகுப்பு வரை தரம் உயா்த்தப்பட்டுள்ளது. இப்பகுதியின் வளா்ச்சி தடையின்றித் தொடரவும், தமிழக முதல்வா் மீண்டும் பொறுப்பேற்று தமிழகத்தை வழிநடத்தவும், உதயசூரியன் சின்னத்திற்குப் பேராதரவு தந்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தாா் அமைச்சா்.
இந்த நிகழ்வில், மாநகர செயலாளா் மு. அன்பழகன், மாவட்ட துணைச் செயலாளா் முத்துச்செல்வம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் அன்பில் பெரியசாமி மற்றும் நிா்வாகிகள், கூட்டணி கட்சி தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி மேற்கு: கே.என்.நேரு ‘ஹாட்ரிக்’ வெற்றி

தமிழ்நாட்டையும், மக்களையும் பாதுகாக்க உறுதியுடன் செயல்படுவோம்: கே.என். நேரு

பேரவைத் தோ்தலின் வெற்றிக்கு அமைச்சா்கள் பரஸ்பரம் வாழ்த்து!

திருச்சி மிளகுபாறையில் கே.என். நேரு தீவிர வாக்கு சேகரிப்பு!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

