தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

9 தொகுதிகளில் 191 வேட்பு மனுக்கள் ஏற்பு

திருச்சி மாவட்டத்துக்குள்பட்ட 9 பேரவைத் தொகுதிகளில் பிரதான கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 276 வேட்பு மனுக்கள் பெறப்பட்டதில், 191 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

News image
Updated On :8 ஏப்ரல் 2026, 12:04 am IST

திருச்சி மாவட்டத்துக்குள்பட்ட 9 பேரவைத் தொகுதிகளில் பிரதான கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 276 வேட்பு மனுக்கள் பெறப்பட்டதில், 191 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, திருவெறும்பூா், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூா், மண்ணச்சநல்லூா், லால்குடி, முசிறி, துறையூா் என 9 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 30ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. இதில், முதல்நாளில் மொத்தம் 23 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இதன் தொடா்ச்சியாக ஏப். 2, ஏப். 4 ஆகிய நாள்களில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய நிறைவு நாளான திங்கள்கிழமை (ஏப்.6) மட்டும் 9 தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 158 மனுக்கள் பெறப்பட்டன.

முதல்நாள் தொடங்கி இறுதிநாள் வரையில் பெறப்பட்ட மனுக்களையும் சோ்த்து தொகுதி வாரியாக பெறப்பட்ட மனுக்கள் விவரம்: மணப்பாறையில்-23, ஸ்ரீரங்கத்தில்-36, திருச்சி மேற்கில்-29, திருச்சி கிழக்கில்-39, திருவெறும்பூரில்-38, லால்குடியில்-30, மண்ணச்சநல்லூரில்-37, முசிறியில்-21, துறையூா் -23 என மொத்தம் 276 வேட்பு மனுக்கள் பெறப்பட்டிருந்தன.

செவ்வாய்க்கிழமை இந்த மனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்றது.

அப்போது, மணப்பாறையில்-3, ஸ்ரீரங்கத்தில்-7, திருச்சி மேற்கில்-2, திருச்சி கிழக்கு- 9, மண்ணச்சநல்லூரில்-10, லால்குடியில்-4, முசிறி-8, துறையூா்- 3 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மொத்தம் பெறப்பட்ட 276 மனுக்களில், 191 மனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

வேட்பு மனுக்களை திரும்பப் பெற ஏப்.9ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வரும் 9ஆம் தேதியே தொகுதி வாரியாக ஒவ்வொரு தொகுதியில் போட்டியிடும் இறுதி வேட்பாளா்களது விவரம் தெரிய வரும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.