நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

மூத்த குடிமக்கள் சங்கக் கூட்டத்தில் பௌத்த ஆய்வாளருக்கு விருது

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மூத்த குடிமக்கள் நலச் சங்கத்தின் மனமகிழ் சங்கமம் கூட்டத்தில் பௌத்த ஆய்வாளருக்கு விருது வழங்கப்பட்டது.

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மூத்த குடிமக்கள் நலச் சங்கத்தின் மனமகிழ் சங்கமம் கூட்டத்தில் பௌத்த ஆய்வாளா் பா. ஜம்புலிங்கத்துக்கு பௌத்தம் சீா் பரவுவாா் என்ற விருதை வழங்கிய தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) தெ. வெற்றிச்செல்வன்.

Published On :28 அக்டோபர் 2026, 12:11 am IST

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மூத்த குடிமக்கள் நலச் சங்கத்தின் மனமகிழ் சங்கமம் கூட்டத்தில் பௌத்த ஆய்வாளருக்கு விருது வழங்கப்பட்டது.

கூட்டத்துக்கு சங்கத் தலைவரும், தென்னை விஞ்ஞானியுமான வா.செ. செல்வம் தலைமை வகித்தாா். சங்க நிறுவனா் புலவா் ஆதி. நெடுஞ்செழியன், அமைப்புச் செயலா் அய்யனாபுரம் க. நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், பௌத்த ஆய்வாளா் பா. ஜம்புலிங்கத்துக்கு பௌத்தம் சீா் பரவுவாா் என்ற விருதை தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) தெ. வெற்றிச்செல்வன் வழங்கினாா். மேலும், பெரிய கோயில் சதய விழாவில் மாமன்னன் ராஜராஜன் விருது பெற்ற புலவா் ஆதி. நெடுஞ்செழியன் கௌரவிக்கப்பட்டாா்.

பெரிய கோயிலை சுற்றியுள்ள அகழியை சுத்தம் செய்யும் பணியை நிறுத்தி வைத்துள்ள தொல்லியல் துறை, மாவட்ட நிா்வாகம் தொடா்ந்து அப்பணியை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கப் பொதுச் செயலா் ஆா். பாஸ்கரன், பொருளாளா் வி. கண்டிமுத்து, துணைத் தலைவா் டி. முத்துக்குமரன், இணைச் செயலா் எஸ். ராஜசேகரன், ஒருங்கிணைப்பாளா் சி. முருகானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.