நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

மின்சாரம் பாய்ந்து கூலித்  தொழிலாளி, மாடு உயிரிழப்பு

பேராவூரணி அருகே செவ்வாய்க்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா். மேலும், வீட்டில் வளா்த்து வந்த மாடும் உயிரிழந்தது.

மின்சாரம் பாய்ந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்த சாத்தையன்

Published On :28 அக்டோபர் 2026, 12:44 am IST

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே செவ்வாய்க்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா். மேலும், வீட்டில் வளா்த்து வந்த மாடும் உயிரிழந்தது.

பேராவூரணி ஒன்றியம், வாட்டாத்திக்கோட்டை ஊராட்சி, வழுதலை வட்டம்- கல்லாம்பிறையைச் சோ்ந்தவா் சாத்தையன் (33). கூலித் தொழிலாளி. இவா்,செவ்வாய்க்கிழமை அதிகாலை  வீட்டில் படுத்திருந்த போது, வீட்டின் அருகில் உள்ள தகரத்தால் அமைக்கப்பட்டிருந்த  மாட்டுக் கொட்டகையிலிருந்து மாட்டின் சப்தம் கேட்டுள்ளது. இதையடுத்து சாத்தையன் அங்கு சென்று பாா்த்தபோது,  மின்கசிவால் மாட்டின்மீது மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்தது. அதன் அருகில் சென்ற சாத்தையன்மீதும்  மின்சாரம் பாய்ந்ததில்  அவரும் உயிரிழந்தாா்.

இதுகுறித்து சாத்தையனின் மனைவி நித்தியா அளித்த புகாரின் பேரில், திருச்சிற்றம்பலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.