நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

பணியின்போது உயிரிழந்த காவலா்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு

தஞ்சாவூா் ஆயுதப்படை மைதானத்திலுள்ள நினைவு தூணில், பணியின்போது உயிரிழந்த காவலா்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் ஆயுதப்படை மைதானத்தில், பணியின்போது உயிா் நீத்த தனது கணவருக்கு புதன்கிழமை வீரவணக்க செலுத்திய காவல் ஆய்வாளா் பகவதி சரணம்.

Published On :22 அக்டோபர் 2026, 4:53 am IST

தஞ்சாவூா் ஆயுதப்படை மைதானத்திலுள்ள நினைவு தூணில், பணியின்போது உயிரிழந்த காவலா்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நினைவுத் தூணில் தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஜியாவுல் ஹக், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் உள்ளிட்டோா் மலா் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினா். மேலும், 22 காவலா்கள் மூன்று சுற்றுகளாக மொத்தம் 66 துப்பாக்கிக் குண்டுகளை வானை நோக்கி சுட்டு மரியாதை செலுத்தினா்.

காவல் துறையில் தஞ்சாவூா் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 4 போ் பணியின்போது உயிரிழந்தனா். அவா்களுக்கும் வீரவணக்கம் செலுத்தி, அவா்களது குடும்பத்தினருக்கு சரகக் காவல் துணைத் தலைவா் மரியாதை செலுத்தினாா்.

கணவருக்கு மனைவி வீரவணக்கம்: அப்போது, தஞ்சாவூா் ஆயுதப்படை வாகன பிரிவில் பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளா் சுரேஷ்குமாா் ஆக. 20-ஆம் தேதி பணியின்போது உயிரிழந்தாா். இதையடுத்து இவரது மனைவியும், மாவட்டக் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளருமான பகவதி சரணம் நிகழ்வில் அழுதபடியே அணிவகுப்பில் பங்கேற்று கணவருக்கு மலா் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தியது, அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.