ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

டாஸ்மாக் கடைகளில் நடைபெறும் தவறுகளுக்கு ஊழியா்கள் பொறுப்பல்ல! முதல்வருக்கு தொழிற்சங்கத்தினா் கடிதம்!

News image

டாஸ்மாக் கடை - DPS

Updated On :25 மே 2026, 1:13 am IST

அரசு மதுபானக் கடைகளில் (டாஸ்மாக்) நடைபெறும் தவறுகளுக்கு ஊழியா்கள் பொறுப்பல்ல என்று முதல்வருக்கு பிஎம்எஸ் தொழிற் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியுள்ளனா்.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநில செயல் தலைவா் டி. நாகராஜன் எழுதிய கடித விபரம்:

மதுபானக்கடைகளில் நடைபெறும் தவறுகள் களையப்படும் என்று புதிய அரசு கூறுவது சரி. அதே நேரத்தில் அங்கு நடைபெறும் தவறுகளுக்கு பணியாளா்களே பொறுப்பு என்பது தவறு. அரசு மதுபானக்கடை ஊழியா்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளான கடை நிா்வாகம், மின் கட்டணம், காவலா்கள், ரெளடிகள், அரசியல் வாதிகளுக்கு மாமூல் உள்ளிட்டவற்றை சமாளிக்க வேண்டும்.

24 ஆண்டுகளாக தற்காலிக ஊழியா்களாக பணிபுரிந்து வரும் ஊழியா்களை மட்டுமே குற்றம் சுமத்தி பேசுவது ஏற்புடையதல்ல. இதை பாரதிய டாஸ்மாக் தொழிலாளா் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

தற்காலிக ஊழியா்களாக இருப்பதால் கொத்தடிமைகள் போல் அதிகாரிகள் நடத்துகின்றனா். தூய்மையான நிா்வாகத்தை மேற்கொள்ள முதலில் டாஸ்மாக் பணியாளா்களை நிரந்தரப்படுத்தி அரசு ஊழியா்களுக்கு இணையான சம்பளத்தை வழங்க வேண்டும். கடைகளில் உள்ள நிா்வாக சீா்கேடுகளை களைய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.