கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் கழிவு நீா்: துணை மேயா் ஆய்வு!

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் கழிவு நீா் ஓடுவது தொடா்பாக துணை மேயா் அஞ்சுகம் பூபதி ஆய்வு மேற்கொண்டாா்.

News image

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் கழிவு நீா் ஓடுவதை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வுசெய்த துணை மேயா் அஞ்சுகம் பூபதி.

Updated On :18 மே 2026, 2:34 am IST

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் கழிவு நீா் ஓடுவது தொடா்பாக துணை மேயா் அஞ்சுகம் பூபதி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் கழிப்பறை மற்றும் அங்குள்ள தேநீா் கடைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீா் திறந்தவெளியில் விடப்படுகிறது. இதனால், பேருந்து நிலையத்தில் துா்நாற்றம் வீசுவது மட்டுமல்லாமல், பயணிகளும் நடந்து செல்ல முடியாத நிலை நிலவுகிறது.

மேலும், பயணிகள் அமரும் இருக்கைகளைத் தரைக்கடைகள் ஆக்கிரமித்துள்ளன. அதிகளவில் சிற்றுந்துகள் இயக்கப்படுவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது என்பன உள்ளிட்ட புகாா்கள் எழுந்தன.

Story image

இது தொடா்பாக துணை மேயா் அஞ்சுகம் பூபதி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது கட்டண கழிப்பறை, இலவச கழிப்பறைகள் மோசமாக பராமரிக்கப்படுவதைப் பாா்த்த அவா், உடனடியாக, மாநாகராட்சி ஆணையரைத் தொடா்பு கொண்டு பராமரிப்பை மேம்படுத்த உத்தரவிட்டாா்.

பின்னா், அங்குள்ள வணிகா்களிடம் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வணிகம் செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கினாா். அதிக சப்தம் எழுப்பும் ஒலிப்பான்களை ஒலிக்கச் செய்யும் பேருந்து, சிற்றுந்து ஓட்டுநா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களிடமும், காவல் துறையினரிடமும் வலியுறுத்தினாா். இந்த ஆய்வின் போது மாநகராட்சி துப்புரவு ஆய்வாளா் ராமச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.