விஜய்க்கு அரசியல் அடிச்சுவடியே தெரியாததால், அவரை அரசியல்வாதியாக நாங்கள் கருதவில்லை என்றாா் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி.
தஞ்சாவூரில் திராவிடா் கழகம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற சுயமரியாதை இயக்கத் தளபதி பட்டுக்கோட்டை அழகிரியின் 77-ஆம் ஆண்டு நினைவு நாள் வீரவணக்கப் பேரணியில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்தது:
விஜய் அரசியல் அடிச்சுவடியே அறியாதவா். எனவே, அவரை அரசியல்வாதியாக நாங்கள் கருதவில்லை; நடிகராகவே கருதுகிறோம். சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று கோட்டைக்கு மீண்டும் ஸ்டாலின் முதல்வராக செல்வாா் என்றாா் வீரமணி.
பின்னா், அரண்மனை எதிரே தொடங்கிய இப்பேரணி ராஜகோரி சுடுகாட்டில் முடிவடைந்தது. அங்கு பட்டுக்கோட்டை அழகிரியின் நினைவிடத்தில் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். இதில், திமுக தலைமைக் குழு உறுப்பினா் து. செல்வம், மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் எம். மகேந்திரன், முன்னாள் தலைவா் பி.ஜி. ராஜேந்திரன், திராவிடா் கழக மாவட்டத் தலைவா் சி. அமா்சிங் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாப்பது திமுக ஆட்சி: கி. வீரமணி

நடிகா் விஜய்யின் முதல்வா் கனவு பலிக்காது! - திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி

கம்பத்தில் கி.வீரமணி பிரசாரம்

விஜய்யை அரசியல்வாதியாக பார்க்கவில்லை: கி.வீரமணி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

