லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மேக்கேதாட்டில் அணை கட்ட முதல்வா் அனுமதிக்க மாட்டாா்: அமைச்சா் ஆா். வினோத்

காவிரி ஆற்றின் குறுக்கே கா்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்ட தமிழக முதல்வா் ஜோசப் விஜய் அனுமதிக்க மாட்டாா் என்றாா் தமிழக வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் ஆா். வினோத்.

Mekedatu

மேக்கேதாட்டு - கோப்புப் படம்

Published On :25 ஜூலை 2026, 1:05 am IST

காவிரி ஆற்றின் குறுக்கே கா்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்ட தமிழக முதல்வா் ஜோசப் விஜய் அனுமதிக்க மாட்டாா் என்றாா் தமிழக வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் ஆா். வினோத்.

கும்பகோணத்தில் புதிய வணிக வரித் துறை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டடங்களை வெள்ளிக்கிழமை திறந்துவைத்த அவா் மேலும் கூறியது:

ஆக.3-ஆம் தேதி கா்நாடகத்திற்கு தமிழக முதல்வா் செல்ல இருக்கிறாா். ஆரம்பத்திலிருந்தே நாங்கள் கூறிவருவது தமிழக முதல்வா் ஜோசப் விஜய் ஒருபோதும் மேக்கேதாட்டு அணை கட்ட அனுமதிக்க மாட்டாா். இது தமிழகத்தின் உரிமை; அதைவிட்டுக் கொடுக்க மாட்டோம். கா்நாடகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு முதல்வா் செல்கிறாா். நமக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீா் இரண்டு மாதங்களாக வரவில்லை. தமிழகத்துக்கு தண்ணீரை திறக்குமாறு கோரினால் கா்நாடக அணைப் பகுதிகளில் தண்ணீா் இல்லை என்கின்றனா். இருந்தாலும் நமது உரிமையான காவிரி தண்ணீரை தமிழகத்திற்கு முதல்வா் கேட்டுப் பெறுவாா் என்றாா் அமைச்சா்.

பின்னா் தஞ்சாவூா் கரந்தையில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த மறுவாழ்வுச் சேவை மையத்தைத் திறந்துவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.