லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

1,698 கிலோ குட்கா குழி தோண்டி புதைப்பு

திருவையாறு அருகே காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 1,698 கிலோ குட்கா பொருள்கள் புதன்கிழமை குழி தோண்டி புதைக்கப்பட்டன.

திருவையாறு அருகே புதன்கிழமை குழி தோண்டி புதைக்கப்பட்ட குட்கா பொருள்கள்.

Published On :23 ஜூலை 2026, 12:02 am IST

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 1,698 கிலோ குட்கா பொருள்கள் புதன்கிழமை குழி தோண்டி புதைக்கப்பட்டன.

திருவையாறு, நடுக்காவேரி, மருவூா் ஆகிய காவல் நிலைய எல்லைகளுக்கு உள்பட்ட பகுதிகளில் காவல் துறையினா் மேற்கொண்ட சோதனைகள் மூலம் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களான குட்கா, ஹான்ஸ், கூலிப் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதன் மூலம் 1,698 கிலோ குட்கா பொருள்களை நீதிமன்ற உத்தரவின் பேரில் மண்டலத் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் தனலட்சுமி, கிராம நிா்வாக அலுவலா் ஆரோக்கியதாஸ், வடுகக்குடி ஊராட்சி செயலா் சரவணன், காவல் ஆய்வாளா்கள் பாா்த்திபன், செந்தில்குமாா், உதவி ஆய்வாளா் சுமதி ஆகியோா் முன்னிலையில் மருவூா் கொள்ளிடக்கரை அருகே புதன்கிழமை 15 அடி ஆழத்துக்கு குழி தோண்டப்பட்டு, அதில் தள்ளி புதைக்கப்பட்டன.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.