லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

முன்விரோதத்தில் 5 பேரை அரிவாளால் வெட்டியவா் கைது

கைது செய்யப்பட்ட குபேந்திரன்.

Published On :21 ஜூலை 2026, 12:00 am IST

திருப்பனந்தாள் அருகே முன்விரோதம் காரணமாக பெண் உள்பட 5 பேரை வெட்டிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாள் இடையாநல்லூா் பகுதியை சோ்ந்தவா் ஞானசௌந்தரி. இவரது வீட்டின் அருகே வசிப்பவா் குபேந்திரன் (28), தனியாா் நிறுவன ஊழியா். இருவருக்கும் இடையே நீண்ட காலமாக இடம் சம்பந்தமாக பிரச்னை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலையில் குபேந்திரன் மது போதையில் ஞானசௌந்தரி வீட்டுக்கு வந்து சத்தம் போட்டு தகராறு செய்தாா். வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை அரிவாளால் உடைத்துள்ளாா். கூச்சல் கேட்டு வெளியே வந்த ஞானசௌந்தரியையும் அரிவாளால் வெட்டினாா்.

இவரது சத்தத்தை கேட்டு தடுக்க வந்த கல்யாணி, கவியரசன், சுகுமாா், வீரமணி ஆகியோரையும் குபேந்திரன் அரிவாளால் வெட்டினாா். இதில் காயமடைந்த 5 பேரும் கும்பகோணம் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா்.

இதில் ஞானசௌந்தரி உயா் சிகிச்சைக்காக தஞ்சாவூா் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இந்த நிகழ்வு தொடா்பாக திருப்பனந்தாள் போலீஸாா் வழக்குப் பதிந்து குபேந்திரனை திங்கள்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.