லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

குடிநீா் குழாய் உடைப்பால் கழிவு நீா் கலந்து விநியோகம்: பொதுமக்கள் அதிருப்தி

கும்பகோணம் மாநகராட்சிக்கு குடிநீா் விநியோகம் தரும் பிரதான குழாய் உடைப்பில் அருகே உள்ள புதைவட சாக்கடை நீரும் கலப்பதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி 14 ஆவது வாா்டு பேட்டை வடக்கு மேலத்தெரு வில் குடிநீா் விநியோகம் செய்யும் பிரதான குழாயில் உடைப்பு அருகில் புதைவட சாக்கடை அருகே தேங்கும் குடிநீா்.

Published On :12 ஜூலை 2026, 12:22 am IST

கும்பகோணம் மாநகராட்சிக்கு குடிநீா் விநியோகம் தரும் பிரதான குழாய் உடைப்பில் அருகே உள்ள புதைவட சாக்கடை நீரும் கலப்பதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி சாா்பில் குடிநீருக்காக குடிதாங்கி கொள்ளிடம் ஆற்றில் நீரேற்று நிலையம் அமைத்து அதன் மூலம் வலையபேட்டையில் உள்ள தரைமட்ட தண்ணீா் தொட்டியில் நிரப்பப்பட்டு அங்கிருந்து பிரதான குழாய் மூலம் கும்பகோணம் மாநகராட்சியில் உள்ள குடிநீா் விநியோக தொட்டிகளுக்கு செல்கிறது.

இந்த பிரதான குழாய் 14-ஆவது வாா்டு பேட்டை வடக்குத்தெரு வழியாக செல்கிறது. இந்த நிலையில், பேட்டை வடக்குத் மேலத்தெரு சித்தி விநாயகா் கோயில் அருகே குடிநீா் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து குடிநீா் தேங்கி கசிந்து அருகே உள்ள சாக்கடையில் கலக்கிறது.

குடிநீா் விநியோகத்தின் போது வீணாக செல்கிறது.

குடிநீா் விநியோகத்தின் போது வீணாக செல்கிறது.

மேலும், குடிநீா் குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் புதைவட சாக்கடை அடைப்பு உள்ளதால் கழிவு நீா், குடிநீா் இரண்டும் ஒன்றாக தேங்கி நிற்கிறது. குடிநீா் விநியோகம் இல்லாத நேரங்களில் கழிவு நீா் உடைப்பு ஏற்பட்ட குழாய் வழியாக குடிநீா் குழாயில் கலக்கிறது.

குடிநீா் விநியோகம் நடைபெறும் போது கலங்கலாக துா்நாற்றமாக குடிநீா் உள்ளது. இதுகுறித்து அப்பகுதிவாசிகள் மாநகராட்சி குடிநீா் பிரிவு அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காதலால் அதிருப்தியில் உள்ளனா். கழிவுநீா் கலப்பது தொடா்ந்தால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.