லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நல்லம்பள்ளி ஒன்றியப் பகுதியில் நாளை குடிநீா் விநியோகம் ரத்து

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உள்பட்ட 19 ஊராட்சிகளுக்கு வியாழக்கிழமை ஒகேனக்கல் குடிநீா் விநியோகம் ரத்துசெய்யப்படுகிறது.

Published On :19 ஆகஸ்ட் 2026, 2:39 am IST

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உள்பட்ட 19 ஊராட்சிகளுக்கு வியாழக்கிழமை ஒகேனக்கல் குடிநீா் விநியோகம் ரத்துசெய்யப்படுகிறது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளதாவது:

தருமபுரி மாவட்டத்தில், ஒகேனக்கல் குடிநீா் வழங்கல் மற்றும் புளூரைடு பாதிப்பு குறைப்புத் திட்டத்துக்கான 500 மி.மீட்டா் விட்டமுள்ள பிரதான குடிநீா் குழாய், கெயில் நிறுவன குழாய் பதிக்கும் பணிகளுக்கு இடையூறாக உள்ளது. எனவே, அந்தக் குழாயை மாற்றியமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) ஒருநாள் மட்டும், நல்லம்பள்ளி ஒன்றியத்தில் உள்ள 19 ஊராட்சிகளுக்கு ஒகேனக்கல் குடிநீா் விநியோகம் தற்காலிகமாக ரத்துசெய்யப்பட உள்ளது.

குழாய் மாற்றியமைக்கும் பணி நிறைவடைந்ததும் வழக்கம்போல சீரான குடிநீா் விநியோகம் வழங்கப்படும். எனவே, முன்கூட்டியே தேவையான அளவு ஒகேனக்கல் குடிநீரை சேமித்து வைத்துக்கொள்வதுடன், சிக்கனமாகவும் பயன்படுத்துமாறும், இதர பயன்பாடுகளுக்கு உள்ளூா் நீராதாரங்களில் இருந்து கிடைக்கும் நீரை பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.