லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஒரு வாரத்துக்கு கோழி இறைச்சி விற்பனையை நிறுத்த வணிகா்கள் முடிவு

கறிகோழிக்கு தீவன கட்டுப்பாடு நெறிமுறைகள் தொடா்பான கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் ஒரு வார காலத்துக்கு கோழி இறைச்சி விற்பனையை நிறுத்த தமிழ்நாடு கோழி வணிகா்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

Published On :12 ஜூலை 2026, 12:25 am IST

கறிகோழிக்கு தீவன கட்டுப்பாடு நெறிமுறைகள் தொடா்பான கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் ஒரு வார காலத்துக்கு கோழி இறைச்சி விற்பனையை நிறுத்த தமிழ்நாடு கோழி வணிகா்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

தஞ்சாவூரில் இக்கூட்டமைப்பின் மாநில செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதில், எடுத்த முடிவுகள் குறித்து செய்தியாளா்களிடம் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் பி. துரைராஜ் தெரிவித்தது:

கறி கோழிக்கு தீவனக் கட்டுப்பாடு தொடா்பாக வழிகாட்டி நெறிமுறைகளை அனைத்து மண்டல, மாவட்ட கால்நடைத் துறை அலுவலா்களுக்கு அரசு எடுத்துரைக்க வேண்டும். கறி கோழி விற்பனைக்கு வருவதற்கு 15 மணி நேரத்துக்கு முன்பே தீவனம் வழங்கும் நடைமுறையைக் கோழி உற்பத்தியாளா்கள் கடைப்பிடிக்கின்றனா். அதன் பின்னா் கோழிகளுக்கு தீவனம் கொடுத்தால், அக்கோழிகளின் எடை கூடுதலாகும்.

மேலும், கோழிகளின் உடலில் தீவனங்கள் தங்கி ஜீரணமாகாததால், அதன் கழிவுகள் வெளியேறி, வாகனங்களில் எச்சங்கள் ஏற்பட்டு, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு விற்பனைக்காக அனுப்பும் கறி கோழிகளுக்கு 15 மணி நேரத்துக்கு முன்பே தீவனம் வழங்கும் நெறிமுறையை நடைமுறைப்படுத்த வேண்டும். இந்தக் கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் ஒரு வார காலத்துக்கு கோழி இறைச்சி விற்பனையை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இனி வரும் காலங்களில் மகாவீா் ஜெயந்தி, வள்ளலாா் தினம் உள்ளிட்ட அனைத்து நாள்களிலும் கறி கோழி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், சுகாதாராம் மேம்படுத்தவும், கோழி கழிவுகளை அகற்றும் நவீன கூடங்களை எல்லா மாவட்டங்களிலும் நிறுவிட அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றாா் துரைராஜ்.

கூட்டத்துக்கு மாநிலச் செயலா் எம். சுந்தரலிங்கம் முன்னிலை வகித்தாா். நிறைவாக மாநிலப் பொருளாளா் எஸ். ஜான்கென்னடி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.